Thursday, November 16, 2017

கற்றல் விளைவுகள் - தொடக்க மற்றும் உயர்தொடக்கநிலை

  • கற்றல் விளைவுகள் அனைத்து பாடங்களும் ஒவ்வொரு வகுப்பிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
  • இவற்றில் ஒவ்வொரு பாடத்தையும் வகுப்பு வாரியாக தனித்தனி ஏ3 தாள்களில்  நகல் எடுத்துக்கொண்டால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
  • தொடக்க நிலையில் வகுப்புகள் இணைந்து காணப்படும் இடங்களில் (1+2; 3+4) இணைந்துள்ள வகுப்புகளின் கற்றல்விளைவுகள் அனைத்தும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். 
பதிவிறக்கம் செய்துகொள்ள சொடுக்கவும்

தொடக்கநிலை

Sunday, November 5, 2017

பெண் கல்வி - ஓவியம், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்துதல் - அறிவிப்பு.

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வெளிக்கொணரும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு  ஓவியம், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்துதல்  சார்ந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செயல்முறைகளை முழுமையாக வசித்து உரிய முறையில் செயலாற்றிட அனைத்து தலைமையாசிரியர்களும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

- மேற்பார்வையாளர் (பொ), அனைவருக்கும் கல்வி இயக்கம், திருப்பத்தூர்.

முக்கிய குறிப்புகள்:

1.* 1 முதல் 3 வகுப்பு வரை - ஓவியம்
   * 4 முதல் 5 வகுப்பு வரை  - பேச்சு
   * 6 முதல் 8 வகுப்பு வரை  - ஓவியம், பேச்சு, கட்டுரை - 3 போட்டிகள்

2. திருப்பத்தூர்  பள்ளி  அளவில் வருகிற 8.11.2017 அன்று நடத்திட வேண்டும்.

3. திருப்பத்தூர் வட்டார அளவில் 14.11.2017 அன்று நடத்திட உத்ததேசமாக திட்டமிடப்பட்டுள்ளது.

4.  தலைப்புகளை பின்வரும் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிந்துகொள்ளவும்.

மாநில திட்ட அலுவலரின் செயல்முறைகள்.