2-ஆம் வகுப்பு முதலாக 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் தமிழ் வாசிப்பு மற்றும் எழுதுதல் திறனை மேம்படுத்த பள்ளி இணைப்புப் பயிற்சி புத்தகம் சிறந்த
துணைக்கருவியாக செயல்படுகிறது.
துணைக்கருவியாக செயல்படுகிறது.
காலத்திட்டம்
* ஏறத்தாழ ஒரு வாரத்திற்கு ஒரு படிநிலை வீதம் 15 படிநிலைகளை 15 முதல் 20 வாரங்களுக்குள் தாராளமாக முடித்துவிடலாம்.
* ஒரு வாரத்தில் உள்ள 5 வேலை நாட்களில் 2 நாள் - வாழைப்பழம், 1நாள்-மாம்பழம், 1நாள்-ஆப்பிள், 1நாள்-பலாப்பழம் என்றவாறு ஒரு நாளில் குறைந்தது ஒன்றரை மணி நேரம் முதல் அதிகபட்சமாக மாணவர்களின் தேவை மற்றும் ஆசிரியரின் விருப்பத்திற்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்ளலாம்.
அல்லது
* ஒரு நாளைக்கு ஒரு படிநிலை வீதம் 15 வேலை நாட்களில் கூட முடித்து விடலாம்.
* அதாவது ஒரு மாதத்துக்கு (15-22 வேலை நாட்களில்) வேறு எந்த பாடத்தையுமே எடுத்துக்கொள்ளாமல் முழுக்க முழுக்க தமிழ் வாசிப்பு மற்றும் எழுதுதல் பயிற்சியை அளித்து உடன் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் முடியும்.
* இதுவும் அந்த ஆசிரியர் மற்றும் அவரது மாணவர்களின் நிலை, தேவை மற்றும் விருப்பம் சார்ந்தது.
தமிழ் வாசிப்பு மற்றும் எழுதுதல் திறனை மட்டும் ஒவ்வொரு மாணவருக்கும் தெளிவுற அளித்து விட்டால் போதும். மற்ற எல்லா பாடங்களையும் கற்பிக்க நாம் பெரும் சிரத்தை எடுக்க வேண்டிய அவசியம் இராது. அத்தோடு நமது பள்ளியின் தரநிலையிலும் முன்னேற்றத்தை முன்னேற்றத்தைக் கொண்டு வந்துவிடலாம்.
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
No comments:
Post a Comment