பள்ளி மேலாண்மைக் குழு சார்பாக
பள்ளியில் நடைமுறைப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள்
- 23.03.2018 அன்று பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரித்தல்
கலந்து கொள்ள வேண்டிய நபர்கள்: 6 பேர்
( SMC தலைவர், த.ஆ. மற்றும் 4 உறுப்பினர்கள்)
பள்ளி மேலாண்மை திட்டம் முறைப்படி
தயாரித்திட வேண்டும்.
புகைப்படம் எடுக்க வேண்டும்.
- 28.03.2018 அன்று சமூக தணிக்கை மேற்கொள்ளப்பட
வேண்டும்.
சமூகத் தணிக்கைக்கான படிவம்
பயிற்சியில் ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் படிவத்தில்
குறிப்பிட்டுள்ளவாறு 7 நபர்கள் கலந்துகொள்ள வேண்டும்.
படிவம் பெறாத பிற பள்ளிகள்
அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
- மேற்கண்ட இரு நிகழ்விற்கும்
தேவையான செலவினங்களை மேற்கொள்ள (தண்ணீர், தேநீர், நொறுக்குத்தீனி, காகித மற்றும்
எழுதுபொருட்கள் போன்றவற்றை வாங்கிக்கொள்ள மற்றும் புகைப்படம் எடுக்க) ஒவ்வொரு அரசுப் பள்ளிகளுக்கும் பள்ளி
மேலாண்மைக் குழு சேமிப்புக்
கணக்கிற்கு ரூ.1080 ECS மூலம் விடுவிக்கப்பட்டுள்ளது.
இத்தொகையை ஒரு நிகழ்விற்கு ரூ.540/- வீதம் ரூ.1080/-ஐ பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வங்கிக் கணக்கில் வரவு பெறாத பள்ளிகள்
ஏதேனும் இருந்தால் அலுவலகத்தை உடன் தொடர்பு கொள்ளவும்.
- இதற்கான விரிவான குறிப்புகள் சார்ந்த கட்டகம் pdf
வடிவில் பின்வரும் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.. பதிவிறக்கம்
செய்துகொள்ளவும்.
- தங்கள் பள்ளியின் மூலம் தயாரித்த
பள்ளி மேம்பாட்டுத் திட்டம், சமூகத் தணிக்கை அறிக்கை மற்றும் நிகழ்வுகளின்
புகைப்படங்கள் அனைத்தையும் தங்கள் பள்ளியிலேயே பத்திரமாக வைத்துக்கொள்ளவும்.
அலுவலகம் கோரும்போது அளிக்கவும்.
-அனைவருக்கும்
கல்வி இயக்கம் – திருப்பத்தூர்.
No comments:
Post a Comment