Wednesday, March 21, 2018

பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரித்தல் மற்றும் சமூக தணிக்கை



பள்ளி மேலாண்மைக் குழு சார்பாக பள்ளியில் நடைமுறைப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள்

  1. 23.03.2018 அன்று பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரித்தல்
கலந்து கொள்ள வேண்டிய நபர்கள்: 6 பேர் ( SMC தலைவர், த.ஆ. மற்றும் 4 உறுப்பினர்கள்)
பள்ளி மேலாண்மை திட்டம் முறைப்படி தயாரித்திட வேண்டும்.
புகைப்படம் எடுக்க வேண்டும்.


  1. 28.03.2018 அன்று சமூக தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
சமூகத் தணிக்கைக்கான படிவம் பயிற்சியில் ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் படிவத்தில் குறிப்பிட்டுள்ளவாறு 7 நபர்கள் கலந்துகொள்ள வேண்டும்.
படிவம் பெறாத பிற பள்ளிகள் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.



  1. மேற்கண்ட இரு நிகழ்விற்கும் தேவையான செலவினங்களை மேற்கொள்ள (தண்ணீர், தேநீர், நொறுக்குத்தீனி, காகித மற்றும் எழுதுபொருட்கள் போன்றவற்றை வாங்கிக்கொள்ள மற்றும் புகைப்படம் எடுக்க)  ஒவ்வொரு அரசுப் பள்ளிகளுக்கும் பள்ளி மேலாண்மைக் குழு  சேமிப்புக் கணக்கிற்கு  ரூ.1080 ECS மூலம் விடுவிக்கப்பட்டுள்ளது.
இத்தொகையை ஒரு நிகழ்விற்கு ரூ.540/- வீதம் ரூ.1080/-ஐ பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வங்கிக் கணக்கில் வரவு பெறாத பள்ளிகள் ஏதேனும் இருந்தால் அலுவலகத்தை உடன் தொடர்பு கொள்ளவும்.


  1. இதற்கான  விரிவான குறிப்புகள் சார்ந்த கட்டகம்  pdf  வடிவில் பின்வரும் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.. பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.


  1. தங்கள் பள்ளியின் மூலம் தயாரித்த பள்ளி மேம்பாட்டுத் திட்டம், சமூகத் தணிக்கை அறிக்கை மற்றும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் அனைத்தையும் தங்கள் பள்ளியிலேயே பத்திரமாக வைத்துக்கொள்ளவும். அலுவலகம் கோரும்போது அளிக்கவும்.

-அனைவருக்கும் கல்வி இயக்கம் – திருப்பத்தூர்.


Thursday, November 16, 2017

கற்றல் விளைவுகள் - தொடக்க மற்றும் உயர்தொடக்கநிலை

  • கற்றல் விளைவுகள் அனைத்து பாடங்களும் ஒவ்வொரு வகுப்பிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
  • இவற்றில் ஒவ்வொரு பாடத்தையும் வகுப்பு வாரியாக தனித்தனி ஏ3 தாள்களில்  நகல் எடுத்துக்கொண்டால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
  • தொடக்க நிலையில் வகுப்புகள் இணைந்து காணப்படும் இடங்களில் (1+2; 3+4) இணைந்துள்ள வகுப்புகளின் கற்றல்விளைவுகள் அனைத்தும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். 
பதிவிறக்கம் செய்துகொள்ள சொடுக்கவும்

தொடக்கநிலை

Sunday, November 5, 2017

பெண் கல்வி - ஓவியம், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்துதல் - அறிவிப்பு.

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வெளிக்கொணரும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு  ஓவியம், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்துதல்  சார்ந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செயல்முறைகளை முழுமையாக வசித்து உரிய முறையில் செயலாற்றிட அனைத்து தலைமையாசிரியர்களும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

- மேற்பார்வையாளர் (பொ), அனைவருக்கும் கல்வி இயக்கம், திருப்பத்தூர்.

முக்கிய குறிப்புகள்:

1.* 1 முதல் 3 வகுப்பு வரை - ஓவியம்
   * 4 முதல் 5 வகுப்பு வரை  - பேச்சு
   * 6 முதல் 8 வகுப்பு வரை  - ஓவியம், பேச்சு, கட்டுரை - 3 போட்டிகள்

2. திருப்பத்தூர்  பள்ளி  அளவில் வருகிற 8.11.2017 அன்று நடத்திட வேண்டும்.

3. திருப்பத்தூர் வட்டார அளவில் 14.11.2017 அன்று நடத்திட உத்ததேசமாக திட்டமிடப்பட்டுள்ளது.

4.  தலைப்புகளை பின்வரும் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிந்துகொள்ளவும்.

மாநில திட்ட அலுவலரின் செயல்முறைகள்.

Friday, October 13, 2017

Techno Club Competition on the Topic of "Integration and Usage of Technology"

ராஷ்ட்ரிய அவிஸ்கார் அபியான் (RAA) திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கிடையே   வட்டார வள  மைய அளவிலும் மாவட்ட அளவிலும்  கணினி திறன் போட்டி "Integration and Usage of Technology" என்ற தலைப்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இடம்: திருப்பத்தூர் அகஇ வட்டார வள மையம்
நாள்: 25.10.2017
தலைப்பு: "Integration and Usage of Technology"  Techno Club Competition

அதற்கான முழு விவரங்கள் கொண்ட செயல்முறைகள் பின்வரும் இணைப்பில் உள்ளது. பதிவிறக்கம் செய்து உரிய வழிகாட்டுதலின்படி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும்.
Techno Club Competition Proceedings

முக்கிய குறிப்பு:

Wednesday, October 11, 2017

குறு வள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்துதல்


ராஷ்ட்ரிய அவிஸ்கார் அபியான் (RAA) திட்டத்தின் கீழ்அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கிடையே   குறு வள  மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான முழு விவரங்கள் கொண்ட செயல்முறைகள் மற்றும் நடைபெறும் இடம் நாள் கலந்துகொள்ளவேண்டிய பள்ளிகளுக்கான விவரம் பின்வரும் கோப்புகளில் உள்ளன.

Wednesday, October 4, 2017

புத்தாக்கக் கல்வி சுற்றுலா 2017-18 - மாணவர்கள் பட்டியல் கோருதல்


2017-18 ஆம் கல்வியாண்டில் புத்தாக்கக் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல 8ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப் பட்டியல் உடனடியாக வரவேற்கப்படுகிறது.

இணைப்பில் உள்ள விவரத்தை முழுமையாக படித்து  படிவத்தை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியரின் கையொப்பத்துடன் 6.10.2017 மாலைக்குள் வட்டார வள மையத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புத்தாக்கக் கல்வி சுற்றுலா 2017-18 - வழிகாட்டு விவரப்படிவம் 

புத்தாக்கக் கல்வி சுற்றுலா 2017-18 - மாணவர்கள் பட்டியல்.