அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனரின் (e.f. v©: 1946/m12/SABL/mfÏ/2013) வழிகாட்டுதல் படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளிப் பார்வையின் போது தர நிர்ணயம் செய்கின்றனர்.
பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழி கற்றல் உள்ளிட்ட பள்ளியின் தரத்தை நிர்ணயிக்கும் கூறுகளையும் வகைப்படுத்தும் முறைகளையும் இவ்வழிகாட்டுதல் படியே ஆசிரியர் பயிற்றுநர்கள் கையாளுகின்றனர் அல்லது கையாளப்பட வேண்டும்.
இவற்றை தெரிந்து வைத்துக்கொள்வதோடு, முறையாக பின்பற்றவும் செய்வதன் மூலம் நமது பள்ளியின் தரத்தை "ஏ" நிலைக்கு கொண்டு வரவோ அல்லது தக்க வைக்கவோ செய்யலாம்.
மதிப்பெண் இட்டு வகைப்படுத்தும் முறைமைகள் மீது பரவலாக விமர்சனங்கள் இருந்தாலும், நாம் கையாளும் இக்கருவி அறிவியல் பார்வையோடு அர்த்தமுள்ளதாகவே உள்ளமை ஆழ்ந்து நோக்கும்போது விளங்கும். தவிர, குழந்தைகளை தரம் பிரித்து பாகுபடுத்தி நீ அறிவாளி; நீ முட்டாள் என்று அடையாளப்படுத்தும் வகையிலான பகுத்தறிவற்ற பண்டை கால வழக்கிலிருந்து ஓரளவேனும் முன்னேறி தரம் என்பது பள்ளிக்கு என்றாகியிருக்கிறது.
(ஆனாலும் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது... அலுவலகத்திற்கு புதிய அட்டைகள் வரிசையாக வந்துகொண்டே இருக்கின்றன.)
நன்றி !
தர நிர்ணய குறிப்புகளை பதிவிறக்கம் செய்து பின்பற்ற சொடுக்கவும்.
பள்ளிகளை வகைப்படுத்துதல் படிவம் & குறிப்புகள்
No comments:
Post a Comment